பிடிஎன் மற்றும் தேசியச் சேவை இரத்துச் செய்யப்படுகிறது

தேசிய குடியியல் பயிற்சி பிரிவு (பிடிஎன்) மற்றும் தேசியச் சேவை ஆகியவை இரத்துச் செய்யப்படுவதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹமான் இன்று அறிவித்தார்.

அவற்றுக்குப் பதிலாக தம் அமைச்சு ஒரு திட்டத்தை வரையும் என்றும் அது கூட்டரசு அரசமைப்புக்கும் ருக்குன் நெகாராவுக்கும் ஏற்ப அமைந்திருக்கும் என்றும் சைட் சாதிக் தெரிவித்தார்.

“தேசியச் சேவை மற்றும் பிடிஎன் திட்டங்களை இரத்துச் செய்து அவற்றின் இடத்தில் வலுவான தொலைநோக்கையும் நல்ல பண்புகளையும் கொண்ட இளைஞர்களை உருவாக்கும் திட்டமொன்றை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது”, என்றவர் கூறினார்.