ஐஎஸ்-தொடர்புடைய பொருள்களை வைத்திருந்ததாக சமய ஆசிரியர்மீது குற்றச்சாட்டு

சமய ஆசிரியர் ஒருவர் ஐஎஸ்-தொடர்புடைய படங்களையும் காணொளிகளையும் வைத்திருந்ததாக இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

47 வயதான முகம்மட் நசிபுல்லா ஹியாவியான் அய்னி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நாள் கேஎல்ஐஏ 2–இல் பிற்பகல் மணி 3.22 அளவில் தன்னுடைய திறன்பேசியில் ஆறு படங்களையும் 16 காணொளிகளையும் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

முகம்மட் நசிபுல்லா குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

முகம்மட் நசிபுல்லா சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த ஒரு சமய ஆசிரியர். அவர், கடந்த ஆண்டு Better Beer Festival என்ற விழாவுடன் தொடர்புப் படுத்திப் பேசப்பட்ட “The Rise Of Jundullah” என்னும் வாட்ஸ்எப் குழுவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.