மகாதிர்: அன்வாருக்கு எதிராகச் சதி இருப்பதாகக் கூறும் ‘மிக நுட்பமான குற்றச்சாட்டு” மீதான ஆதாரத்தைக் காட்டுங்கள்

 

அன்வார் இப்ராகிம் தமக்குப் பிறகு பிரதமர் ஆவதைத் தடுப்பதற்கு தாம் சதித்திட்டம் தீட்டுவதாக தம்மீது குற்றம் சாட்டுபவர்களிடம் அதற்கான ஆதாரத்தை பிரதமர் மகாதிர் கோரியுள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டை அவர் “மிக நுட்பமான குற்றச்சாட்டு” என்று தமது வழக்கமான ஏளனத்துடன் மகாதிர் கூறினார்.

அது பற்றி அந்த மனிதர் ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். நான் எவரிடமும் இது பற்றி பேசியதே இல்லை என்றாரவர்.

நான் உதுங்கியுள்ளேன். இதர கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடும் வேலை எனக்கில்லை என்று இன்று மாலை புத்ரா ஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.

கடந்த இருபது ஆண்டுகளில் அன்வாருக்கு எதிராக மகாதிர் சதித் திட்டம் போடுகிறார் என்று கூறப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

முதல் குற்றச்சாட்டு 1998 இல் அன்வாரை மகாதிர் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய போது கூறப்பட்டது.

இப்போது, பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்டுல் ஹமிட், மகாதிரும் அவரது நெருங்கிய சகா டைம் ஸைனுடினும் பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் சேர்ந்து அன்வாருக்கு எதிராகச் சதித்திட்டம் போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.