அரசு நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக கெடா மாநில சட்டமன்ற முன்னாள் உறுப்பினரை எம்எசிசி நேற்று கைது செய்தது.
நேற்று எம்எசிசி அலுவலகத்தில் பிற்பகல் மணி 4 அளவில் அவர் அங்கு வாக்கு மூலம் அளிக்க வந்த போது கைது செய்யப்பட்டார். இன்று அவர் அலோஸ்டார் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார்.
“டத்தோ” என்று கூறப்படும் அந்த நபர் ஒரு திட்டத்தை நடத்துவதற்காக மந்திரி பெசாரிடம் ரிம30,000 மானியத்திற்கு கடந்த ஆண்டு பெப்ரவரில் மனுச் செய்திருந்தார்..
ஆனால், அவர் அந்த மானியத்தை ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த திட்டத்திற்கு செலவிடவில்லை.
கெடா மாநில எம்எசிசி இயக்குனர் முகமட் பவுஸி தொடர்பு கொண்ட போது அந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.