இக்குனாமிட்டிமிட்டியின் உரிமையாளர் 1எம்டிதான் என்று கூறும் நீதிமன்ற ஆணையைப் பெற அரசாங்கம் விரும்புகிறது

அரசாங்கம் அதிஆடம்பரக் கப்பலான இக்குனாமிட்டி-இன் சட்டப்பூர்வ உரிமையாளர் 1எம்டிபி குழுமம்தான் என்றும் அக்கப்பலை விற்பதால் கிடைக்கும் வருவாய் அந்நிறுவனத்தின் மூலமாக அரசாங்கத்துக்குச் சேர வேண்டும் என்றும் அறிவிக்கும் நீதிமன்ற ஆணையைப் பெற விரும்புகிறது.

“அரசாங்கம் வழக்கு தொடுத்ததன் நோக்கமே…….1எம்டிபி நிறுவனம்தான் அக்கப்பலின் சட்டப்பூர்வ உரிமையாளர் அல்லது அக்கப்பலை வாங்க அந்நிறுவனத்தின் பணம் எவ்வளவு பயன்படுத்திக்கொள்ளப்பட்டதோ அந்த அளவுக்குப் பகுதி உரிமையாளர் என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

“கப்பல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை 1எம்டிபி குழுமத்திடம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறும் நீதிமன்ற ஆணையையும் பெற விரும்புகிறோம்”, என பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.