மசீச எதிர்வரும் பலாக்கொங் இடைத் தேர்தலில் செராஸ் பத்து 11 மசீச கிளையின் இளைஞர் தலைவர் டான் சீ தியோங்கை வேட்பாளராகக் களமிறக்க முடிவு செய்திருப்பதாக துணைத் துணைத் தலைவர் வீ கா சியோங் இன்று அறிவித்தார்.
டானை எதிர்த்து டிஏபி செர்டாங் சோசலிச இளைஞர் தலைவர் வொங் சியு கீ களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அடிநிலை தலைவர்களுக்கிடையிலான மோதலாக அது அமையும்.
முதல்முறையாக இந்த இடைத் தேர்தலில் மசீச அதன் சொந்த சின்னத்தைப் பயன்படுத்தப் போகிறது.
பலாக்கொங் சட்டமன்ற உறுப்பினர் எடி இங், ஜூலை 20-இல் விபத்து ஒன்றில் காலமானதை அடுத்து அத்தொகுதி காலியானது.
இவ்விடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் ஆகஸ்டு 18. வாக்களிப்பு நாள் செப்டம்பர் 8.