டிஏபி, சுபாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) உறுப்பினர் வொங் சியு கி-யை பலாக்கொங் இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அதை அறிவித்தார். கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் அவர் அதை அறிவித்தபோது சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவாவும் உடன் இருந்தார்.
பலாக்கொங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எடி இங், ஜூலை 20இல் சாலை விபத்தில் கொல்லப்பட்டதை அடுத்து அத்தொகுதி காலியானது.
இங், 14வது பொதுத் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட லிம் சின் வா(பிஎன்), முகம்மட் இப்ராகிம் கசாலி(பாஸ்) ஆகிய இருவரையும் தோற்கடித்து 35,538 வாக்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.