முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஎசி) 1எம்டிபி ஊழல் விவகாரம் பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்குவது பற்றி எந்த விதமான மனச்சாட்சிக்குத்தலும் கிடையாது.
எனினும், இது தவறுகளைக் கண்டுபிடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்றாரவர்.
ஆட்சேபம் தெரிவிப்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை, ஏன்னென்றால் நாம் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று நஜிப், இந்தப் புதிய விசாரணை பற்றி அவரது நிலைப்பாடு என்ன என்று கேட்ட போது கூறினார்.
அது பிஎசியின் உரிமை, ஆனால் நாம் தவறானச் செயல்களை கண்டுபிடிக்கும் மனநிலையில் இருக்கக்கூடாது என்று மக்களவைக்கு வெளியில் இன்று மதியம் நஜிப் செய்தியாளர்களிடம் கூறினார்.
14 ஆவது பொதுத்தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்ற ஹரப்பான் நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாரவர்.
நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று நாடாளுமன்றத்தில் பிஎசியும் தேசியக் கணக்காய்வாளரும் 1எம்டிபி பற்றிய விசாரனையை மீண்டும் தொடங்க வகை செயும் கோரிக்கையை தாக்கல் செய்தார்.