பிரதமர்: வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் காலம் தேவை

பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 100 நாள் போதாது, கூடுதல் காலம் தேவை என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

அப்போது தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன என்றும் கூட்டரசு அரசாங்கத்தின் நிலை “படுமோசமாக” இருந்தது ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரிய வந்தது என்றும் அவர் சொன்னார்.

“அப்போதைய அரசாங்கத்தின் செயல்பாட்டை வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. பிறகுதான் நிலைமை எதிர்பார்த்ததை விட மிக, மிக மோசமாக இருந்தது தெரிய வந்தது. கடன் தொகை நாங்கள் நினைத்ததைவிட பன்மடங்கு பெரிதாக இருந்தது.

“இருக்கும் சூழல் நாங்கள் நினைத்ததைச் செய்வதற்கு ஏதுவாக இல்லை.

“சிலரை அகற்ற வேண்டியிருந்தது. சிலவற்றை நாடாளுமன்றத்தின் மூலம்தான் நிறைவேற்ற முடியும். இதற்குக் கால அவகாசம் தேவை.

“சட்டவரைவுகள் கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும்”, என்று மகாதிர் கோலாலும்பூரில் கார்டியோ வஸ்குலர் செண்ட்ரல் மருத்துவமனையைத் திறந்து வைத்தபோது கூறினார்.