ஆகஸ்ட் 29-ம் தேதி, அரசு தலைமைச் செயலாளர் (கே.எஸ்.என்.) அலி ஹம்சா ஓய்வு பெறுவார் என, ‘தி ஸ்டார்’ நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், இந்த ஆண்டு இறுதி வரை 63 வயதான உயர்மட்ட அதிகாரிகளை தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் கொண்டுள்ள போதிலும், அலி ஹம்சா இம்மாதம் பதவி விலகுவார் எனத் தெரிகிறது.
கே.எஸ்.என். அலுவலகம் ஆகஸ்ட் 29-ஐ, அலியின் கடைசி நாள் என மேற்கோளிட்டுள்ள வேளை, அலியின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது எனப் பிரதமர் அலுவலகத்தின் மற்றொரு ஆதாரம் கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து, அலி ஹம்சாவின் பதவிக்கு யார் வருவார் என புத்ராஜெயாவில் வதந்திகள் பல எழுந்துள்ளன.
ஆயினும், பக்காத்தான் ஹராப்பான் அறிக்கையின் படி, உயர்மட்ட அதிகாரிகளை நியமிக்க, நாடாளுமன்றம் ஒரு சிறப்பு குழுவை அமைக்கும்.