அன்வார் : எனக்காக நாற்காலியை விட்டுக்கொடுக்க, பலர் தயாராக உள்ளனர்

தனக்காக, பல எம்.பி.-க்கள் தங்கள் நாடாளுமன்ற நாற்காலியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இருப்பினும், நாடாளுமன்றத்திற்குத் திரும்ப, தற்போது உகந்த நேரம் அல்ல என தான் உணர்ந்துள்ளதாக அன்வார் கூறினார்.

துன் டாக்டர் மகாதிர் முகமட்டிற்குப் பின், பிரதமர் பதவியை ஏற்கவுள்ள அவர், எந்த அறிவிப்பையும் வெளியிடுவதற்கு முன்பு, பிரதமரைச் சந்தித்து, அவருடன் கலந்துபேசவுள்ளதாகவும் கூறினார்.

“கடந்த வாரம் டாக்டர் மகாதீருடன் பேசினேன், முடிவெடுத்ததும் நான் முதலில் அவரிடம் தெரிவிப்பேன்.

“அதன் பின்னர்தான், நான் மற்றவர்களிடம் சொல்வேன்,” என்று அவர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.