ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ் நேரடி மோதல்

எதிர்வரும் ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பானின் பிகேஆருக்கும் பாஸுக்குமிடையில் நேரடிப் போட்டியாக அமைகிறது.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலான அதில் ஹரப்பான் வேட்பாளர் ஹலிமி அபு பக்கார் பாஸின் ஹலிமா அலிக்கு எதிராகக் களமிறங்குகிறார்.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் இன்று பெட்டாலிங் ஜெயா சிவிக்ஸ் செண்டரில் சுமூகமாக நடந்தது.

இது செப்டம்பர் 8-இல் சிலாங்கூரில் நடைபெறும் இரட்டை இடைத் தேர்தல்களில் ஒன்றாகும்.

மற்றோர் இடைத் தேர்தலான பலாக்கொங் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனமும் இன்று காலை நடந்தது. அதில் பாஸ் போட்டியிடவில்லை. மசீச ஹரப்பானுடன் மோதுகிறது.

பிகேஆரின் ஷஹாருடின் பதருடின் நோயின் காரணமாக காலமானதை அடுத்து ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஸ்ரீசித்தியாவில் ஷஹாருடின் மே 9 பொதுத் தேர்தலில் 19,372 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.