ஜி.எஸ்.தி. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் உண்டியலில் இருந்து காணாமல் போன, RM19.25 பில்லியன் குற்றச்சாட்டு தொடர்பாக, அடுத்த வாரம், போலிசார் தன்னிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், “இன்னும் காரணம் சொல்ல முடியாது”, 121,429 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட காணாமல் போன அத்தொகைக்கு அவர் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டுமென லிம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இருப்பினும், டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், நஜிப் எங்கே, எப்போது தனது விளக்கத்தைக் கொடுக்க வேண்டுமென தெரிவிக்கவில்லை.
நஜிப் 3 கேள்விகளுக்குக் கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென லிம் கூறினார் :
- நிர்ணயிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் பணத்தைத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை என்பதை நஜிப் அனுமதித்தாரா?
- RM 82.9 பில்லியனை, ஜி.எஸ்.தி. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் அறக்கட்டளைக் கணக்கில் முழுமையாக செலுத்த வேண்டாம் எனும், முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் முகமட் இர்வான் செரிகாரின் முடிவிற்கு நஜிப் அனுமதி அளித்தாரா? 2015-ம் ஆண்டு முதல், RM 63.5 பில்லியன் மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்டதால், RM 19.25 பில்லியன் கணக்கில் குறைகிறது.
- 2015-ஆம் ஆண்டிலிருந்து திருப்பிச் செலுத்தப்படாத தொகையை, அரசாங்க வருவாயாக, முன்னாள் அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதை அவர் அனுமதித்துள்ளாரா?
“நிதியமைச்சர் என்ற வகையில், இந்த விஷயத்தில் தனது தொடர்பு பற்றி, இதுவரை நஜிப் எதுவும் கூறவில்லை, மாறாக நான் போலிஸ் புகார் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். போலிசாருடனான எனது முழு ஒத்துழைப்பு, புதிய அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது.
“இப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட 121,429 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களில் கணிசமானோர், ஜி.எஸ்.தி. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் அறக்கட்டளைக் கணக்கில் இருக்கும் RM 19.4 பில்லியன் பணம், ஏன் இரண்டு வாரங்களுக்குள் அவர்களிடம் சேர்க்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்,” என்றும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம், தனது அறிக்கையில் கூறியுள்ளார்.