இக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை

இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் கிடைக்கப்பட்ட தகவலின்படி, மலேசியாவின் விருப்பத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று, ஹாங்ஷொவ், சீனாவில் இருக்கும் மகாதிர், மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

முன்னதாக, இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலைப் பாதுகாக்கும் உரிமையை மலேசியாவிடம் ஒப்படைக்கும் பணியில் தங்களுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என அமெரிக்க நீதித்துறை (டி.ஒ.ஜி.) வெளியிட்ட அறிக்கை பற்றி மகாதிரிடம் கேட்கப்பட்டது.

இன்று காலை, 1எம்டிபி நிதியுடன் தொடர்புடைய அக்கப்பலின் தகவல்களைப் புதுப்பித்தபோது, அவர்கள் இதனை மத்திய கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவிலிருந்த அந்தக் கப்பலை, மலேசியாவிடம் ஒப்படைக்க, அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைத்திருக்கிறது என அக்கப்பலின் உரிமை கோரும் இக்குவானிமிட்டி கேய்மன் லிமிடெட் குற்றஞ்சாட்டியுள்ளதாக அண்மையில் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது.