நாடாளுமன்றம் | நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தை உடைக்கும் வகையில், வரவிருக்கும் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வின் போது, அரசாங்க மசோதா விவாதிக்கப்படவுள்ளது.
ஜிஎஸ்டி மற்றும் எஸ்எஸ்டி தொடர்பான மசோதாக்கள், நாடாளுமன்ற விவாதப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளன.
பொதுவாக, யாங்-டி பெர்த்துவான் அகோங்கிற்கு நன்றி தெரிவிக்கும் அல்லது அவரின் மரியாதைக்குரிய விவாதங்கள் ஒரு சில நாள்கள் முதம் கூட்டத் தொடரில் இடம்பெறும். ஆனால், இம்முறை டேவான் ரக்யாட் மற்றும் டேவான் நெகாராவின் முதல் அமர்வில், அரசாங்க மசோதாக்களின் விவாதம் வழக்கமான நடைமுறைக்கு முரணாக உள்ளது.
நாடாளுமன்ற நாட்காட்டி பக்கத்தின் படி, ஆகஸ்ட் 20 மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற அமர்வின் முதல் 2 நாள்களில், செனட்டர்கள் மசோதாக்களையும் அரசாங்க விவகாரங்களையும் விவாதிக்க உள்ளனர்.
ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 30 வரை, யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் மரியாதைக்குரிய விவாதங்களும், செப்டம்பர் 3-ம் தேதி விவாத அமர்வும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு அமைச்சர்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பர்.
அமர்வின் கடைசி நாளான செப்டம்பர் 12-ம் திகதி, மீண்டும் மசோதா மற்றும் அரசாங்க விவகாரங்களைப் பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.