ஹராப்பான் மீதான சீனா முதலீட்டாளர்களின் அச்சம் – பிரதமர் கையாண்டார்

மே 9, பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மலேசிய அரசாங்கத்தின் மாற்றம் குறித்த சீனா முதலீட்டாளர்களின் கவலைகளுக்குப் பிரதமர் மகாதீர் முகமட் இன்று பதிலளித்தார்.

பெய்ஜிங்கில், சீனா தொழில்முனைவோர் தலைவர்கள் மன்றத்தில் பேசிய மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சில திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு, சீனாவை எதிர்க்கும் நோக்கம் கொண்டதல்ல என விளக்கினார்.

“மலேசியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடானது, என்னவென்பதை நான் விளக்கியுள்ளேன். தொழில்நுட்பத்துடன் மலேசியா வந்த வெளிநாட்டவர்கள், மலேசியாவில் தொழிற்சாலைகளை உருவாக்கி, மலேசியர்களைப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தினர்.

“ஆனால், மலேசிய அரசாங்கம் (முந்தைய) ஒரு மோசமான உள்கட்டமைப்பை உருவாக்க, பணத்தைக் கடன் வாங்கியது, அது மலேசியாவிற்கு நிச்சயம் நல்லது அல்ல.

“இது சீனாவைப் பற்றியது அல்ல, முந்தைய மலேசிய அரசாங்கத்தைப் பற்றியது, அவர்கள் நிறைய பணம் கடன் வாங்கி விட்டார்கள், இப்போது அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

“இது நேரடி முதலீடு அல்ல, ஆனால் செயலாக்க சாத்தியக்கூறுகள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளை ஆய்வு செய்யாமல், மலேசியர்கள் பணத்துடன் விளையாடுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

ஹராப்பான் மதிப்பாய்வு செய்கின்ற பல திட்டங்களின் நிர்வாக நடவடிக்கைகளைப் பற்றிய கவலைகள் மற்றும் மலேசியாவில் சீன முதலீடுகளுக்கு இன்னும் வரவேற்பு உள்ளதா போன்ற கேள்விகளுக்கு, இன்று மகாதிர் பதிலளித்தார்.