மக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர் நன்றி தெரிவித்தார்

புதிய அரசாங்கத்தின் தலைமையின் கீழ், இந்நாட்டு முஸ்லிம்கள் சமாதானமாகவும், அமைதியாகவும் ஹஜ் திருநாளைக் கொண்டாடுவதற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நன்றி தெரிவித்தார்.

நாளை மலேசியாவில் கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளையொட்டி உரையாற்றிய டாக்டர் மகாதிர், நாட்டின் நிலைமையை மீளமைத்து, அமைதியாகவும் சமாதானமாக கொண்டாடப்படுவதற்கு நன்றி தெரிவித்தார்.

“ஹஜ் பெருநாள் கொண்டாடவுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது வாழ்த்துகள்.

“மலேசியர்களுக்குப் புதிய அரசாங்கத்தின் மீதிருந்த சந்தேகம் இப்போது இல்லை, அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

“நாட்டின் நிலைமை மாறியுள்ளதற்கு, நான் மீண்டும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்,” என அவர் தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ  செய்தி மூலம் தெரிவித்தார்.

-பெர்னாமா