மகாதிர்: குவாந்தான் ‘சீனப் பெருஞ்சுவர்” அகற்றப்பட வேண்டும்

 

மலேசியா-சீனா குவாந்தான் இண்டஸ்ரியல் பார்க்-கை சுற்றியுள்ள சுவர்கள் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

அந்த இடத்தை உள்ளூர்வாசிகள் “சீனப் பெருஞ்சுவர்” என்று கூறுவதாக மலேசியாகினி கடந்த ஆண்டு ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.

சீனாவிலிருந்து மலேசியாவுக்கு திரும்பி வந்ததும் அவர் அளித்த முதல் நேர்காணலில், தாம் அந்த இடத்தில் மலேசியாவின் அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்பு விரும்புவதாகவும், அந்த விவகாரத்தை பெய்ஜிங்குடன் எழுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

சீனாவின் சட்டங்கள் மற்றும் சீனாவிலுள்ள நடைமுறைகள் போன்றவற்றுக்கு நாங்கள் கீழ்ப்படிகிறோம். அவ்வாறே அவர்களும் எங்களுடைய சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று சீன அரசாங்கத்திடம் விளக்கிக் கூறினேன். அதற்கு அவர்கள் மறுப்பு கூறவே இல்லை என்றார் மகாதிர்.

இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் நமது சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றுடன் அனுசரித்துபோவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று மகாதிர் புத்ரா ஜெயாவில் ஒரு நேர்காணலில் மலேசியாகினியிடம் கூறினார்.

‘இண்டஸ்டிரியல் பார்க்’ ஓர் அந்நிய நாடல்ல. அது மலேசிய சட்டத்தின் கீழ் இருக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அங்கே செல்ல அனுமதிக்கப்படாதது சரியல்ல என்று கூறிய மகாதிர், அந்தச் சுவர்களை நாம் அகற்ற வேண்டிய தேவை இருக்கிறது, ஏனென்றால் இவையெல்லாம் நமது நாட்டில் தவறானைவ என்றார்.

மலேசியச் சட்டம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.