உல்லாசக் கப்பல் இகுவானிமிட்டியை உடனடியாக விற்க 1எம்டிபிக்கும் அரசாங்கத்திற்கும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை யார் வைத்துக்கொள்வது என்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும்.
இந்த விபரத்தை வாதிகளின் வழக்குரைஞர் ஓங் சீ கெவான் நீதிபரிபாலன ஆணையர் கதிஜா இட்ரீஸை அவரது அறையில் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
விற்பதற்கான உத்தரவு கிடைத்து விட்டது. அடுத்த நடவடிக்கை அக்கப்பலை விற்று விடுவதற்கான நடவடிக்கைகளை எவ்வளவு விரைவில் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும் என்று அவர் நீதிமன்ற அறைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இகுவானிமிட்டியின் சொந்தக்காரர்களின் பிரதிநிதிகள் அல்லது 1எம்டிபியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள வணிகர் ஜோ லோவின் பிரதிநிதிகள் எவரும் நீதிமன்றத்தில் இல்லை.