அகோங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டங்கள் அளிக்கப்பட மாட்டது.

எதிர்வரும் செப்டெம்பர் 9 இல், பேரரசார் சுல்தான் முகம்மட் V அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது.

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் இதனை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

அந்நிகழ்ச்சியின் போது, பேரரசரின் உரை மற்றும் பிரதமர் மகாதிரின் வாழ்த்துச் செய்தி மட்டுமே இடம்பெறும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு வட்டாரம் தெரிவித்தது.

பேரரசரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பேரரசர் பட்டமளிப்பு செய்யாமல் இருப்பது இதுவே முதல்தடவையாகும் என்றும் மலேசியாகினி தெரிந்து கொண்டுள்ளது.

முந்தைய அரசாங்கம் அளித்திருந்த பட்டம் பெறுவோர்களின் பட்டியல் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டில், சுல்தான் முகமட் 1,518 பட்டங்களை அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வழங்கியிருந்தார்.