எச்எஸ்ஆரை ஒத்திவைப்பது மீதான பேச்சு தொடர்கிறது

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையில் அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்தை ஒத்திவைப்பது மீதான பேச்சுகள் தொடர்ந்து நடைபெற்றுவதாக ஒரு செய்தி கூறுகிறது.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு அதை உறுதிப்படுத்தியதாக சேனல் நியுஸ் ஆசியா நேற்று அறிவித்தது.

“எச்எஸ்ஆர் திட்டத்தை ஒத்திவைக்க மலேசியா கேட்டுக்கொண்டிருப்பது குறித்து உள்கட்டுமான ஒருங்கிணைப்பு அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான காவ் பூன் வானும் மலேசிய பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்கள்.

“எச்எஸ்ஆர் இருதரப்பு ஒப்பந்தம் அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் செய்வதாக இருந்தால் மலேசியா, சிங்கப்பூர் இரண்டுமே அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்”, என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்ததாக அந்த சிங்கப்பூர் செய்தி நிறுவனம் கூறிற்று.