மெர்டேகிழக்குக்கரையில் கா ஆய்வு மையம் அண்மையில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அவரது நிர்வாகத்துக்கும் முறையே 62 விழுக்காடும் 58 விழுக்காடும் ஆதரவு இருப்பதைக் காட்டியது.
இதை வைத்துப் பார்க்கும்போது மே9 பொதுத் தேர்தலில் மகாதிர் தலைமையில் போட்டியிட்ட பக்கத்தான் ஹரப்பானுக்கு மலாய்க்காரர் வாக்க்குகளில் 30 விழுக்காடுதான் கிடைத்தது என்பதை நம்ப முடிகிறதா?
தீவகற்ப மலேசியாவில் 52 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பெர்சத்துவால் 13 இடங்களைத்தான் வெற்றிபெற முடிந்தது. இது குறித்துக் கருத்துரைத்த மகாதிர் அக்கட்சி சொந்த சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் கூடுதல் இடங்களைப் பெற்றிருக்க முடியும் என்றார்,
ஹரப்பான், தேர்தலில் பல்லினக் கட்சியான பிகேஆர் சின்னத்தையே பயன்படுத்த முடிவு செய்தது தீவகற்பத்தின் மேற்குக்கரையில் நல்ல பலனைத் தந்தது. ஆனால், கிழக்குக்கரையில் அது பலிக்கவில்லை.
“ஹரப்பான் சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும். அது முடியாது போயிற்று. இதனால் எங்கள் கட்சி வேட்பாளர்கள் பலர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.
“எங்கள் கட்சி மலாய்க்காரர் கட்சி. கிராமப்புறங்களில் மலாய்க்காரர்கள் ஒரு மலாய்க் கட்சிக்குத்தான் வாக்களிப்பர். அம்னோவை நிராகரிக்க முடிவு செய்ததால் அவர்கள் அதற்கு வாக்களிக்கவில்லை….. அதன் பிறகு அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது பாஸ்”, என்று மகாதிர் கூறினார்.
அது மலாய்க்காரர் நலனுக்காக போராடும் கட்சியாக அவர்களுக்குத் தோன்றியதால் அம்னோவுக்கு மாற்றாக அதுதான் என்று முடிவு செய்து விட்டார்கள்.
“அதனால்தான் (கிழக்குக் கரையில்) இதுவரை இத்தனை இடங்களில் வென்றிராத பாஸ் கட்சியால் இத்தனை இடங்களைப் பெற முடிந்தது.
“எங்கள் பாடுதான் சிக்கலானது. (ஒரு மலாய்க் கட்சியான பெர்சத்து) பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவது அவர்களுக்குத் தெரியவில்லை”, என்றாரவர்.
ஹரப்பான் கட்சிகள், சங்கப் பதிவகம் பெர்சத்துவை இரத்துச் செய்ய முடிவு செய்ததாலும் ஹரப்பான் கூட்டணியைப் பதிவுசெய்ய மறுத்ததாலும் பிகேஆர் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. அவ்விரண்டு பிரச்னைகளுக்கும் இப்போது தீர்வு காணப்பட்டு விட்டது.