‘எதிரணியின் பலவீனம்; அரசாங்கம் வாக்குறுதிகளைத் தட்டிக்கழிக்க முடிகிறது’

எதிரணி வலுவற்று இருப்பதால்தான் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமால் தட்டிக்கழிக்கிறது, “வெறுக்கத்தக்க” மூன்றாவது தேசிய கார் திட்டமொன்றைத் தொடங்க நினைக்கிறது என்கிறார் மசீச மகளிர் உதவித் தலைவர் ஒங் சொங் ஸ்வென்.

செண்ட்டரான ஒங், மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஹரப்பான், ஐக்கிய தேர்வுச் சான்றிதழை(யுஇசி) அங்கீகரிப்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றார்.

“தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததற்குக் கலக்கமூட்டும் தேசியக் கடன்களே காரணம் என்று அது கூறிக்கொண்டிருக்கிறது.

“அதே வேளை, 2020க்குள் மூன்றாவது தேசிய கார் திட்டமொன்றைத் தொடங்குவதற்கு அது தயாராகி வருவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

“கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கம் மக்கள் வெறுத்தொதுக்கும் தேசிய கார் திட்டமொன்றைத் தொடங்க நினைக்கிறதே அது ஏனென்று எண்ணிப்பார்த்தீர்களா?

“ஏனென்றால், அதன் நடவடிக்கைகளைச் சரிபார்க்கவும் சரிசெய்யவும் வலுவான எதிர்க்கட்சி இல்லை”. பலாக்கொங் இடைத் தேர்தல் வேட்பாளர் டான் சீ தியோங்குக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஒங் இவ்வாறு கூறினார்.