பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவரிடையே ஒற்றுமையை வலுப்படுத்த புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்த எண்ணுகிறார்.
அது விரிவான, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு திட்டம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த கால ஒற்றுமைத் திட்டங்களின் தோல்விக்கான காரணங்களையும் அது கவனத்தில் கொள்ளும் என்றார்.
“கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் மக்களை ஒன்றுபடுத்தத் தவறிவிட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்”, என்று கூறிய அமைச்சர், அதைச் சரிசெய்வதாக இப்புதுத் திட்டம் அமையும் என்றார்.
அத்திட்டம் டிசம்பர் அல்லது ஜனவரி முற்பகுதி வாக்கில் தயாராகி விடும் என்று பிரதமர்துறையில் தேசிய ஒற்றுமைக்கும் சமூக நற்பண்புகளுக்கும் பொறுப்பேற்றுள்ள வேதமூர்த்தி கூறினார்.
அரசாங்கத்தின் சமய நல்லிணக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக சாபாவைச் சுற்றிப்பார்த்து வரும் வேதமூரத்தி, சாபாவில் நிலவும் ஒற்றுமை உணர்வைப் பாராட்டினார். அதைத் தீவகற்ப மலேசியாவிலும் அறிமுகப்படுத்த விழைகிறார்.
அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சமயங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பது அவரை மிகவும் கவர்ந்தது.
”அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள், பானங்கள் அருந்துகிறர்கள். இது மற்ற மலேசியரும் பின்பற்ற வேண்டிய பண்பு என்பது என் கருத்து.
“இந்த சாபா கலாச்சாரத்தைத் தீவகற்பத்தில் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒற்றுமையே நமக்குத் தேவை”, என்றாரவர்.
அடப்பாவிகளா, ஹிண்ட்ராப் 18 கோரிக்கைகள் அம்போ தானா ? முதலில் அன்றைய பிரதமர் மகாதீர் இந்தியர்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்றீர்கள் ! பிறகு 13 வது பொது தேர்தலில் BN அரசாங்கத்திற்கு ஆதரவு தந்தீர்கள் ! 14 பொது தேர்தலில் 100 நாட்களில் 4 % இருக்கும் அரசாங்க வேலையை 17 % இருந்த 1972 ஆண்டை போல் மாற்ற முடியும் என்றீர்கள் ! இப்பொழுது எல்லாம் மறந்து, எதோ புது கதையை ஆரம்பித்திருக்கிறீர்கள் ! மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் , நீங்கள்தானே அரசியல் வாதிகள் ?