பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு பாயான் பாருவில், ரிபோர்மாசி இயக்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவுவிழாவில் பேசிய சைபுடின், ரபிசியின் திறமைகளைப் புகழ்ந்துரைத்தார். அவரது செயல்பாட்டைக் கண்டு அன்வார் இப்ராகிமே வியந்து போனதாக சைபுடின் குறிப்பிட்டார்.
அன்வார் பற்றி ஆஸ்திரேலிய வழக்குரைஞர் எழுதிய Anwar Returns: The Final Twist என்ற நூலில், தமக்குப் பின் பிகேஆர் தலைவராக வரக்கூடியவர் ரபிசிதான் என்று அன்வார் குறிப்பிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ரபிசி எதிர்வரும் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மினை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.