இரண்டு நீதிமன்ற வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாண்டான் எம்பி ரபிசி ரம்லி, கட்சித் தேர்தலில் கலந்துகொள்ள முடியுமா, முடியாதா என்பதை பிகேஆர் தேர்தல் குழுதான் முடிவு செய்ய வேண்டும்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது வான் அசிசா இவ்வாறு கூறினார்.
இன்றைய சன் டெய்லியில், நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் கட்சித் தேர்தலில் போட்டியிட கட்சி விதிகள் அனுமதிப்பதில்லை என்று முதல்பக்கத்தில் வெளிவந்திருக்கும் செய்தி அறிக்கை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. ரபிசியைப் போட்டியிட அனுமதித்தால் பிகேஆர் பதிவு இரத்தாகும் அபாயம் இருப்பதாக ஒரு வட்டாரம் கூறியதாக சன் கூறியிருந்தது.
ரபிசி 1எம்டிபி கணக்கறிக்கையை சட்டவிரோதமாக வைத்திருந்து, ஊடகங்களுக்கு அதைக் காண்பித்த குற்றத்துக்காக 2016-இல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல் இவ்வாண்டு தொடக்கத்தில் தேசிய பீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி ) மற்றும் அதன் தலைவர் முகம்மட் சாலேயின் வங்கிக் கணக்குகளை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக 30மாதச் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது.
அதே வேளை, சங்கப் பதிவதிகாரி ரபிசிக்குத் தேர்தலில் போட்டியிட சிறப்பு அனுமதி கொடுத்திருப்பதாகவும் ஒரு செய்தி. இதுவும் சன் நாளேட்டில்தான் வெளிவந்துள்ளது.