நாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து தாம் பொய் உரைப்பதாக முன்பு கூறி வந்த ஹரப்பான் தலைவர்கள் இப்போது உள்துறை அமைச்சு உண்மையான எண்ணிகையை வெளியிட்டிருப்பததைத் தொடர்ந்து அவர்கள் தம்மிடம் மன்னிப்பு கேட்பாளர்களா என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நஜிப் அவரது முகநூல் பக்கத்தில், 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் பிஎன் அரசாங்கத்திற்கு எதிராகக் கூறப்பட்ட இன்னொரு அவதூறு திருத்தப்பட்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.
இன்று தேவான் நெகாராவில் துணை உள்துறை அமைச்சர் முகமட் அசிஸ் ஜம்மான் நாடற்ற இந்தியர்களின் உண்மையான எண்ணிக்கை ஹரப்பான் தலைவர்கள் கூறிவந்த 300,000 விட மிகக் குறைவானதாகும் என்று கூறியிருந்ததை நஜிப் குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சு 3,853 மனுக்களை பெற்றதாகவும் அவற்றில் 1,638 தீர்க்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதைச் சுட்டிக் காட்டிய நஜிப், அந்த 1,638 மனுக்களும் அவரது நிருவாகத்தின் காலத்தில் தீர்க்கப்பட்டதாகும் என்றார்.
குடிமக்களாவதற்கு உண்மையிலே தகுதி பெற்ற எவருடைய உரிமையையும் நாங்கள் புறக்கணித்ததே இல்லை என்றாரவர்.
இந்த விவகாரம் மே 9-க்கு முன்பு தேர்தல் செராமாக்களில் பெரிதுபடுத்தப்பட்டது. இப்போது அதைப் பெரிதுபடுத்தியவர்களில் பலர் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடற்ற இந்தியர்களின் உண்மையான எண்ணிக்கையை ஹரப்பான் அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ள வேளையில், இந்தத் தலைவர்கள் எண்ணிக்கையைத் தவறாகக் கணக்கிட்டதற்காக மன்னிப்பு கோருவார்களா என்று நஜிப் வினவினார்.
கடந்த ஆண்டு, டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் குலசேகரன், சார்ல்ஸ் சந்தியாகு மற்றும் பினாங்கு இரன்டாவது துணை முதலமைச்சர் பி. இராமசாமி ஆகியோர் நாடாற்ற இந்தியர்களின் பிரச்சனை பற்றி பேசியுள்ளனர்.
அக்டோபர் 2017 இல், மலேசியாவில் 2,000 இந்தியர்கள் மட்டுமே நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்திருந்தார்.