தமிழ் நேசன் முன்னாள் செய்தியாளர் வி.பி. தவசேகரன்,66, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதை அவரால் சமாளிக்க முடியாததால் நல்லுள்ளங்களின் ஆதரவைத் நாடுகிறார்.
2009-இலிருந்து இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தவசேகரனுக்கு வாய்வழியாக உணவு உண்ண முடிவதில்லை. எல்லாம் பாலுணவுதான். அதுவும் சிறப்புக் கருவிகள் மூலமாக நேரடியாக வயிற்றுக்குள் அனுப்பப்படுகிறது.
“மூன்று முறை, 2009-இல், 2015இல், 2016-இல் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். ஆகஸ்ட் 16-இல் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்”, என நேற்று தவசேகரன் தன்னை மருத்துவமனையில் சந்தித்த பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
தவசேகரனின் நடமாட்டம் குறைந்து விட்டது. இப்போது அவருடைய எடை 29 கிலோ கிராம்தான். மருத்துவச் செலவுக்கும் பாலுணவுக்கும் ஒவ்வொரு மாதமும் ரிம1,500 செலவாகிறது.
நல்ல உள்ளங்கள் தமக்கு உதவும் என்றவர் நம்புகிறார். உதவ விரும்பும் கருணை உள்ளங்கள் அவருடைய வங்கிக் கணக்குக்கே பணத்தை நேரடியாக அனுப்பலாம். VP Tawasegaran CIMB Bank account 06010733559528.