புத்ராஜெயா மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், மலேசிய வெளிவிவகார உளவுத்துறை (எம்இஐஓ) முன்னாள் தலைவரான ஹசானா அப்துல் ஹமிட்டை ஐந்து நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வழக்குரைஞர் அஹமட் அக்ரில் காரிப், ஒரு வாரத் தடுப்புக் காவல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், மெஜிஸ்ட்ரேட் ஷா வீரா அப்துல் ஹாலிம் ஐந்து நாள்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார்.
ஹசானா, எம் ஏசிசி லாக்-அப் சட்டையில், விலங்கிடப்பட்டு புத்ரா ஜெயா மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார்.
பொதுத் தேர்தலுக்கான நிதி காணாமல்போன சம்பவம் மீதான விசாரணை தொடர்பில் அவர் நேற்று எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டார்.