அன்வாரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர உத்துசான் ஒப்புக்கொண்டுள்ளது, வழக்கு தீர்க்கப்பட்டது

 

பிகேஆரின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் சட்டத்துறை தலைவர் அலுவலகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று மறைமுகமாகக் கூறும் கட்டுரைக்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அன்வாரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர இன்று ஒப்புக்கொண்டது.

உத்துசானுக்கான வழக்குரைஞர் அஸ்ஹார் அர்மான் அலி அந்த மன்னிப்பு கோரல் அந்த நாளிழதலில் வெளியிடப்படும். அதற்கான தேதி இன்னும் நிர்ணையிக்கப்படவில்லை. அந்த ஒப்பந்தம் பற்றிய இதர விபரங்கள் செப்டெம்பர் 28 இல் பூர்த்தியாக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

நீதிபரிபாலன ஆணையர் ஃபைஸா ஜமாலுடினை அவரது அறையில் சந்தித்தப் பின்னர் அஸ்ஹார் இதனைத் தெரிவித்தார். அவருடன் அன்வாரின் வழக்குரைஞர் சங்கீத் கவுர் டியோ, டிவி3 இன் வழக்குரைஞர் லிம் கி சி மற்றும் மஸ்லானின் வழக்குரைஞர் ஹன்சால் ரெஸுவா மரைக்கான் ஆகியோரும் இருந்தனர்.

2015 ஆம் ஆண்டில் அன்வார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவில் பிஎன் பெர்மாத்தாங் பாவ் முன்னாள் வேட்பாளர் மஸ்லான் இஸ்மாயில் தம்மைப் பற்றி அவதூறுகளையும் தீங்கான சொற்களையும் ஆகஸ்ட் 2, 2013 இல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அவதூறுககையும் தீங்கான சொற்களையும் தம்மைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளாமல் டிவி3 இல் ஒலிபரப்பவும், அடுத்த நாள் அதை உத்துசானில் வெளியிடவும் மஸ்லான் ஏற்பாடு செய்திருந்தார் என்று அன்வார் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் விளைவாக தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அன்வர் மேலும் கூறியிருந்தார்.