போலீஸ் மீண்டும் நஜிப் ரசாக்கின் வாக்குமூலத்தை பதிவு செய்யவிருக்கிறது. அவர் நாளை மினாரா 238 ஜாலான் துன் ரசாக்கிற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அவர் பணச் சலவை எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதித் தடுப்புச் சட்டத்தின் (அம்லா 2001) கீழ் விசாரிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை இதே சட்டத்தின் கீழ் நஜிப்பின் வாக்குமூலம் ஒரு மணி நேரத்திற்கு பதிவு செய்யப்பட்டது.
“ஆம், திங்கள்கிழமையிலிருந்து விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கு அவர் நாளை மீண்டும் வருகிறார்”, என்று அந்த வட்டாரம் கூறியது.