இரகசியத் துப்பறிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பிரிவின் முன்னாள் தலைவர் ஹஸ்னா அப்துல் ஹமிட் உட்பட, கைப்பற்றப்பட்ட மில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பகிரங்கமாகக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மதியம் நடத்தப்படும் செய்தியாளர் கூட்டத்தில் இது பகிரங்கப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டப் பின்னர் இப்பணம் இருப்பதும் அது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதும் விசாரணையாளர்களுக்குத் தெரிய வந்தது என்று வட்டாரங்கள் மலேசியகினியிடம் கூறின.
பக்கத்தான் அரசாங்கத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹஸ்னா விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று ஐந்து நாள்களுக்கு கடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
ஹஸ்னாவும் இன்னும் பணியிலிருக்கும் இதர அதிகாரிகளும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்காக எம்எசிசி சட்டம், செக்சன் 23(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.