எச்எஸ்ஆர் திட்டம்: சிங்கப்பூரும் மலேசியாவும் ஒப்பந்தத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன

 

கோலாலம்பூர்-சிங்கப்பூர் வெகு-விரைவு இரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்தில் இரு தரப்பினருக்கும் பலன் அளிக்கக்கூடிய தீர்வுக்கு மலேசியாவும் சிங்கப்பூரும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்று பொருளாதார விவாகார அமைச்சர் அஸ்மின் அலி கூறுகிறார்.

இந்த எச்எஸ்ஆர் திட்டம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தை பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அறிவித்ததிலிருந்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருகின்றன.

இத்திட்டத்தின், நிலம் கையகப்படுத்துதல் உட்பட, இறுதியான செலவு ரிம110 பில்லியன் வரையில் ஆகும் என்று அஸ்மின் தெரிவித்தார்.

முதலில் இத்திட்டத்தைக் கைவிட எண்ணிய மலேசிய அரசாங்கம், இப்போது அதைத் தள்ளிவைக்க தயாராக இருப்பதோடு அதன் செலவையும் குறைக்க விரும்புகிறது.

இத்திட்டம் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தமாக இருப்பதால், இத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதென்றால் சிங்கப்பூருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியுள்ளது.

இது சம்பந்தப்பட்ட ஒரு புதிய ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தை இம்மாத முற்பகுதியில் தொடங்கியது.