இரக்கமற்ற ஆட்சிமுறையை நிராகரித்து “இரண்டாவது சுதந்திரம்” பெற்ற அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதற்கு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நேற்றிரவு உறுதியளித்தார்.
அரசாங்கத்துடன் இணைந்து உழைத்து முன்னாள் அரசாங்கத்தால் பாழடையச் செய்யப்பட்ட நாட்டை மீண்டும் புதுப்பிக்க வருமாறு அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
உண்மையில், இது நமது இரண்டாவது சுதந்திரம், இரக்கமற்ற ஆட்சிமுறையின் விலங்கிலிருந்து நாம் விடுபட்டிருக்கிறோம். நமது வாழ்க்கை சற்று ஆறுதலானதாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
“இந்த ஹரப்பான் அரசாங்கம் இன அல்லது சமய வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க உத்தரவாதம் அளிக்கிறது”, என்று மகாதிர் கூறினார்.