நாட்டில் உள்ள 1மலேசியா மருத்துவ நிலையங்களில் 33 படிப்படியாக மூடப்படும் என்றும் எஞ்சிய 313 நிலையங்களும் சீரமைக்கப்பட்டு சமூக கிளினிக்குகள் எனப் பெயர்மாற்றம் செய்யப்படும் என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹமட் கூறினார்.
“33 கிளினிக்குகள் மூடப்படுவதால் அவற்றைச் சுற்றியுள்ள மக்களுக்குக் கிடைத்துவந்த மருத்துவச் சேவை பாதிக்கப்படாது. ஏனென்றால் அருகிலேயே மருத்துவமனைகளும் வேறு கிளினிக்குகளும் உள்ளன. அங்கு அவர்கள் செல்லலாம்”. அமைச்சர் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்தில் தேசிய பல்மருத்துவ வாரத்தைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒவ்வொரு சமூக கிளினிக்கிலும் ஒரு மருத்துவரும் தாதியர்களும் மருந்தாளுநரும் இருப்பார்கள் என சுல்கிப்ளி கூறினார்.
இவ்விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றாரவர்.
1மலேசிய கிளினிக்குகள் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொண்டு வந்தவை. 2010-இல் அறிமுகமான அவை ரிம1 என்ற குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்கி வந்தன.