இன்று பினாங்கு உயர்நீதிமன்றம் முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் பாங் லி கூன் ஆகியோரை அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த இரு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. அவர்கள் மாநில நிலத்தின் தகுதியை மாற்றியது மற்றும் சந்தை விலைக்குக் குறைவாக ஒரு வீட்டை வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன.
குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களின் வழக்குரைஞர்கள் அளித்திருந்த விளக்கத்தை சட்டத்துறை தலைவரின் அலுவலகம் ஏற்றுக்கொண்ட பின்னர் இம்முடிவு ஏற்பட்டுள்ளது.
அரசு தரப்பு வழக்குரைஞர் முகமட் மஸ்ரி டாவுட் நிபந்தனையுடனான விடுவிப்பு அளிக்கும்படி முதலில் கோரினார். ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதி ஹதாரியா சைட் இஸ்மாயில் முழு விடுவிப்பு அளிக்க முடிவு செய்தார்.