அஸ்மின், கேஎல் – சிங்கப்பூர் எச்எஸ்ஆர் காலைவரையின்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது

 

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம் காலைவரையின்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமானது.

இது சிங்கப்பூர் தரப்பு அதிகாரிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இத்திட்டம் காலைவரையின்றி தள்ளிபோடப்பட வேண்டும் ஏனென்றால் மலேசியப் பொருளாதாரம் இறுதியில் மேம்பாடடையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்ற நமது கருத்தை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது .
இக்காலக்கட்டத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை என்று அஸ்மின் கூறினார்.

ஆனால், இத்திட்டம் தள்ளிப்போடப்பட்ட நாளுக்குப் பின்னர் இரத்து செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அஸ்மின் மேலும் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக நஜிப் ரசாக் நிருவாகம் 2010 ஆண்டில் இவ்விரு நகர்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும் இத்திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் சம்பந்தப்பட்ட சில குத்தகைகள் கொடுக்கப்பட்டு விட்டாலும். தற்போதைய நிருவாகம் நாட்டின் பொருளாதார நிலையைக் கவனத்தில் கொண்டு இத்திட்டத்தை கைவிட முயற்சிகளை மேற்கொண்டது.

நஜிப்பின் கணிப்புப்படி, இத்திட்டம் அமல்படுத்த ரிம72 பில்லியன் செலவாகும். தற்போதைய நிருவாகம் இதற்கு ரிம110 பில்லியன் செலவாகும் என்று கணித்துள்ளது.