பாலியல் உறவு கொண்டதற்காக இரண்டு பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்படி தண்டனை மக்களுக்கு இஸ்லாமிய சட்டம் பற்றி போதிப்பதற்காகும் என்று ஷரியா அமலாக்கப்படுவதற்கு பொறுப்பான திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் சத்திபுல் பாரி மாமாட் கூறினார்.
நமது நோக்கம் மக்களுக்கு எப்படி பிரம்படி தண்டனை இஸ்லாமிய சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுகிறது என்பதைப் போதிப்பதாகும். இதன் குறிக்கோள் அப்பெண்களைத் துன்பப்படுத்துவதில்லை. இது மக்களுக்குப் போதிக்கும் நடைமுறை என்று சத்திபுல் அத்தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கோலதிரங்கானுவில் கூறினார்.
மக்கள் இம்மாதிரியான குற்றங்களைப் புரியக்கூடாது என்று அவர்களுக்கு இத்தண்டனை நினைவுறுத்துகிறது, ஏனென்றால் இது புற்றுநோய் போல் சமுதாயத்தில் பரவக்கூடியது என்றாரவர்.
இன்று நாம் காண்பதிலிருந்து, இம்மாதிரியான தண்டனை இனிமேலும் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்காது என்று அவர் மேலும் கூறினார்.
இத்தண்டனை கோல திரங்கானு ஷரியா உயர்நீதிமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.