குவான் எங் விடுவிக்கப்பட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்ததாக மகாதிர் கூறுகிறார்

 

ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுவிக்கப்பட்ட செய்தியால் தாமும்கூட அதிர்ச்சியடைந்ததாக பிரதமர் மகாதிர் கூறினார்.

அக்குற்றச்சாட்டுகள் நிலத்தின் தகுதியை மாற்றியது மற்றும் ஒரு வீட்டை சந்தை மதிப்பீட்டிற்கு குறைவாக வாங்கியது சார்ந்ததாகும்.

அரசு தரப்பு வழக்குரைஞர் இவ்விருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டதைத் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து லிம்மையும் வணிகர் பாங் லி கூனையும் பினாங்கு உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

பினாங்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அதிர்ச்சி தெரிவித்திருந்தது. அது குறித்து மகாதிரிடம் கேட்ட போது, “அதிர்ச்சியடைதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு, நானும்கூட”, என்று அவர் கூறினார்.

புருனைக்கு இரு நாள் வருகையை முடித்துக் கொண்ட மகாதிர் பண்டார் செரி பகவான் காஸிர் முனி அரண்மனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.