இவ்வாண்டு 30,000 க்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர்

குடிநுழைவுத் துறை    ஜனவரி மாதம் தொடங்கி     முறையான ஆவணங்கள் வைத்திராத 30, 000 க்கும் மேற்பட்ட குடியேறிகளைத் தடுத்து வைத்ததாக    அதன் தலைமை இயக்குனர் முஸ்டபார் அலி    இன்று கூறினார்.

அவர்களோடு அவர்களை வேலைக்கு வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாளிகளும் தடுத்து வைக்கப்பட்டதாக முஸ்டபார் தெரிவித்தார்.

“நாடு முழுக்க 10ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் தாங்களாக முன்வந்து சரணடைய 3+1 திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 30-இல் அது முடிவுக்கு வந்தது.

“மேலும், மீண்டும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் திட்டம் ஒன்றையும் கொண்டு வந்தோம். ஜூன் 30 -உடன் அதுவும் முடிவுக்கு வந்தது. என்ன செய்தாலும், பலர் நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை”, என்றவர் கூறினார்.