அமைச்சு: ஆங்கிலம் போதனா மொழியாகப் பயன்படுத்தப்படுவது சட்டப்படி குற்றம்

கல்வி அமைச்சு தேசிய பள்ளிகளில் ஆங்கிலம் போதனா மொழியாக பயன்படுத்துவதை அனுமதிக்காது.

அவ்வாறு செய்வது கூட்டரசு அரசமைப்பின் சட்டப் பிரிவு 152(1)-ஐயும் 1963/67 தேசிய மொழிச் சட்டத்தையும் மீறுவதாகும் என்பதுடன் 1996 கல்விச் சட்டத்துக்கும் முரணானது என்று அமைச்சு கூறிற்று.

” எனவே அரசமைப்பு மற்றும் சட்டம் ஆகியவற்றின் மாண்பை நிலைநிறுத்தும் வகையில் பள்ளிகளில், சரவாக் பள்ளிகள் உள்பட, ஆங்கிலம் போதனாமொழியாகப் பயன்படுத்தப்படுவதை அமைச்சு அனுமதிக்காது.

“மாணவர்களிடையே ஆங்கிலத்தின் தரத்தை உயர்த்துவதற்குச் சட்டத்துக்கும் கல்விக் கொள்கைக்கும் ஏற்ப வேறு வழிகளில் முயலலாம்.”.

அமைச்சு நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் இவ்வாறு கூறியது.