போனஸ் கொடுப்பதற்காக அரசாங்கம் கடன்பட முடியாது

அரசாங்க அதிகாரிகளுக்குப் போனஸ், ஊக்கத் தொகை மற்றும் வெகுமதிகள் வழங்குவதில், நாட்டின் நிதியியல் திறன் மற்றும் நிலைப்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

நாட்டின் வருவாய் அதிகரித்து இருந்தால் மட்டுமே அவை வழங்கப்படும் எனத் துணை நிதியமைச்சர் அமீருட்டின் ஹம்ஷா கூறினார்.

“வருவாய் அதிகம் இருந்தால், நாம் கொடுக்கலாம்.

“கடன்பட்டு போனஸ் அல்லது வெகுமதியை நம்மால் வழங்க முடியாது,” என்றார் அவர்.

“நிதி நிலைமை அனுமதித்தால், மிகவும் நன்றாக இருந்தால் கொடுக்கலாம் என்பதே வெகுமதிக்கான விதிமுறை ஆகும். ஆக, அப்படி இருந்தால் இந்த போனஸ் தொடரும்,” என்று இன்று நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.