பெண்களுக்குப் பிரம்படி கொடுப்பதை அமைச்சரவை ஏற்கவில்லை

திரெங்கானுவில் இரண்டு பெண்களுக்குப் பிரம்படி கொடுக்கப்பட்டதை முறையற்ற தண்டனையாக மலேசிய அமைச்சரவை கருதுகிறது. இஸ்லாமிய போதனைகளின் மைய பொருளே கருணைதான். அதை அந்தத் தண்டனை பிரதிபலிக்கவில்லை.

அவ்விரு பெண்களும் முதல்-முறை குற்றவாளிகள் என்பதால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்க வேண்டும், பிரம்படித் தண்டனை கொடுத்திருக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் கருத்தாகும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

“அமைச்சரவையைப் பொறுத்தவரை இது (பிரம்படி) இஸ்லாத்தின் நீதியையும் இரக்கக் குணத்தையும் பிரதிபலிக்கவில்லை.

“அது அவர்களின் முதல் குற்றச் செயல். முதல் குற்றத்துக்கு ஆலோசனை கொடுத்திருக்கலாம். தண்டித்து நாடு முழுக்க அது தெரியும்படிச் செய்திருக்க வேண்டாம். இது இஸ்லாம் குறித்து தப்பான எண்ணத்தை உண்டுபண்ணும்”, என்றார்.