தமக்கு ஒரு வாரிசை பெர்சத்து விரைவில் தேர்ந்தெடுக்கும்: மகாதிர் நம்பிக்கை

பெர்சத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், தமக்குப் பின் தகுதியான ஒருவர் பெர்சத்து தலைவராவார் என்று நம்புகிறார்.

“திறமையானவர்கள் தோன்றுவார்கள். விரைவில் அப்படிப்பட்டவர்கள் வரக்கூடும். திறமையானவர்கள் தலைவர்களாவதையே ஊக்குவிக்கிறோம்.

“பெர்சத்துவில் ஆற்றல்மிக்க இளைஞர்கள் நிறைய உள்ளனர்”, வியாழக்கிழமை சினார் ஹரப்பானுக்கும் மலேசியாகினிக்கும் வழங்கிய கூட்டு நேர்காணல் ஒன்றில் மகாதிர் இதனைத் தெரிவித்தார்.

அப்படிப்பட்டவர்களை அடையாளம் காட்டுமாறு கேட்டதற்கு பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான், உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் ரபிக் நிஜாமொகிதின் ஆகியோர் திறமை வாய்ந்த இளம் தலைவர்கள் என்றார்.

பிரதமருமான டாக்டர் மகாதிர் அடுத்த சில ஆண்டுகளில் பிரதமர் பொறுப்பை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியை மாற்றிக் கொடுத்த பிறகும் மகாதிர் பெர்சத்து அவைத் தலைவராக தொடர்வாரா என்பது தெரியவில்லை.