இலங்கை தூதர் தாக்கப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 21/09/2018 அறிவிப்பு

கடந்த 04 செப்டம்பர் 2016 உலக தமிழர்களின் உள்ளத்தை குளிர வைத்த, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்

இலங்கை தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை பொறுப்பாளர்களான மு.அ. கலைமுகிலன் வீ. பாலமுருகன் மற்றும் இவர்களுடன் கைதான சமூக சேவகர் ரகு ஆகியோர் மீதான வழக்கு, குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில்  வருகிற 21-ஆம் திகதி இறுதி தீர்ப்பு கொடுக்கப்பட உள்ளது என நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய இளைஞர் பாசறை பொறுப்பாளர் திரு. மாவேந்தன் தெரிவித்தார்.

60 ஆண்டுகால ஈழ விடுதலை கனவை நெஞ்சில் சுமந்து, இனப்படுகொலை வலிகளை தாங்க முடியாத பெருங்கோபத்துடன் நிகழ்த்தப்பட்டது இத்தாக்குதல் வழக்கு என்பதை தமிழர்களாகிய நம் அனைவரும் அறிந்ததே.

மலேசிய தமிழர்களுக்கு தமிழர் தேசிய சிந்தனையை விதைக்கும் பயணத்தில் தமது இனம், மொழி, சமயம் மீட்சிக்காகவே தனது உடல் உயிர் வாழ்வு அனைத்தையும் அர்ப்பணிக்கும் இந்த புரட்சியாளர்களை நாம் கைவிட்டு விடக்கூடாது.

முடிந்தளவு அபராதத்தில் தமது புரட்சியாளர்களை விடுவிக்க நாம் தமிழர் இயக்க உறவுகள் நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் தங்களால் இயன்ற தொகையை இயக்க வங்கியில் செலுத்தி அதன் ரசீதை பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் விடுதலையை உறுதி செய்யலாம் என இயக்க தலைமை செயலவை உறுப்பினர் யுவராசன் இராசராம் கூறினார்.

MAY BANK

PERTUBUHAN NAAM TAMILAR MALAYSIA 

A/C : 562991004992

பொறுப்பாளர்கள்:

  1. யுவராசன் – 0166240624 தலைமை செயலவை உறுப்பினர்

  2. மாவேந்தன் – 0166652411 இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

ஈழ தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்து விட்டு, தமது நாட்டுக்கு நமது கண்முன்னே சிவப்புக்கம்பள வருகை தந்த கொலைகாரன் இராசப்பக்சேவை தடுத்த தம்பிகளை தற்காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு  மானத்தமிழர்களுக்கும் இருக்கிறது.

தமது தன்மான தம்பிகளின் விடுதலைக்காக மலேசிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் நிதி வழங்கி உதவி செய்வதுடன் வருகின்ற 21/09/2018 காலை 9.00 மணிக்கு செப்பாங் (Sepang) நீதிமன்றத்தில்  திரளும்படி இயக்க தேசிய இளைஞர் பாசறை பொறுப்பாளரும் மூவர் விடுதலைக்கான நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு. மாவேந்தன் கேட்டுக் கொண்டார்.

திரள்வோம் திரள்வோம் பகைமிளர திரள்வோம் பைந்தமிழ் இனத்தீரே..!