லொக்மான் : இடைத்தேர்தலில் அன்வாரின் வெற்றிக்கு மகாதீரே முட்டுக்கட்டையாக இருப்பார்

நாட்டின் 8-வது பிரதமராகும் அன்வார் இப்ராஹிமின் கனவு நிறைவேறாது என தாம் நம்புவதாக லொக்மான் நூர் அடாம் கூறியுள்ளார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லொக்மான், அந்த இரண்டு நபர்களுக்கும் இடையிலான குரோதம் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும், மகாதிரே இந்த விஷயத்தைத் தடுப்பார் என்றும் கூறினார்.

“டாக்டர் மகாதீரே ஒரு வேட்பாளரை நிறுத்துவார் என்று நான் நம்புகிறேன் (அன்வாருக்கான இடைத்தேர்தலில், எதிர்க்கட்சி தனது வேட்பாளரை நிறுத்தவில்லை என்றால்).

“இது நிச்சயம். அன்வார் பிரதமராகாமல் இருப்பதை உறுதிசெய்ய, டாக்டர் மகாதீர் விடாமுயற்சியுடன் செயல்படுவார், அன்வார் பிரதமராவதை மகாதிர் விரும்பவில்லை,” என்று அவர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.