நஜிப்: நான் போய் நான்கு மாதங்கள் ஆகின்றன, ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து குறைவது ஏன்?

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எண்ணெய் விலைகள் வலுவடைந்து வரும் வேளையில் ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறதே எனக் கவலை தெரிவித்தார்.

” 14வது பொதுத் தேர்தலுக்குமுன், பக்கத்தான் தலைவர்கள் ’நஜிப் பதவி இழந்தால் ரிங்கிட் உயரும் என்றும் கூறினார்கள்’.

“நான் பதவி இழந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. ஆனாலும், ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து விழுவது ஏன் என்று என்று எனக்குப் புரியவில்லையே”, என முகநூல் பக்கத்தில் நஜிப் கேலி செய்தார்.

ரிங்கிட்டின் நிலை மேலும் மோசமடைவதற்குமுன் புத்ரா ஜெயா தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.