அன்வார் போட்டியிடுவதற்காக போர்ட் டிக்சன் தொகுதி காலி செய்யப்பட்டது

நாடாளுமன்றம் திரும்ப நோக்கம் கொண்டிருக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. அவர் போட்டியிடுவதற்கு போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலி செய்து கொடுக்கப்படவுள்ளது.

போர்ட் டிக்சன் நடப்பு எம்பி டேனியல் பாலகோபால் அப்துல்லா அத் தொகுதியைக் காலி செய்யப்போவதாக இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

14வது பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் பிஎன்னையும் பாஸையும் எதிர்த்துப் போட்டியிட்ட டேனியல் 17,740 வாக்குகள் பெரும்பான்மையில் வேற்றி பெற்றார்.