போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா தாம் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் காட்டிய மனப்பூர்வமான ஆதரவுதான் தாம் போர்ட் டிக்சனில் போட்டியிட முடிவெடுத்தற்கான காரணம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று ஹாங்காங்கில் கூறினார்.
எனக்கு விட்டுக்கொடுப்பதில் டேமியல் மிகுந்த தீவிரம் காட்டினார். எனக்கு விட்டுக்கொடுக்கப் பலர் இருந்தார்கள். ஆனால், அரசியலில் சிலர் ஆம் என்று அறிவிப்பார்கள், பிறகு பின்வாங்கி விடுவார்கள் என்றார் அன்வார்,
ஆனால், டேனியில் மிகத் தீவிரமாக இருந்தார். அவர் விலகிக்கொள்ளவில்லை என்றும் அவர் தொடர்ந்து தெலுக் கெமாங் (பழைய பெயர்) தொகுதியில் தமக்கு உதவியாளராக இருப்பார் என்று கூறியதாகவும் அன்வார் தெரிவித்தார்.
அவர் சிறப்பாக விவாதம் செய்தார். நான் கவரப்பட்டேன் என்று கூறிய அன்வார், தமக்கு டேனியலை அவர் பேராக்கில் பிகேஆர் உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து தெரியும் என்றும் கூறினார்.
நான் தேர்வு செய்வதற்கு வடக்கில், மத்தியப் பகுதியில் மற்றும் தெற்கில் இருக்கைகள் கொடுக்கப்பட்டன. ஆனால், டேனியல் என்னை மிகவும் கவந்து விட்டார் என்று அன்வார் மேலும் கூறினார்.
பிகேஆர் இன்று முன்னேரத்தில் வெளியிட்ட அறிக்கையில் டேனியல் அவரது நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்வார் என்றும் அன்வார் அங்கு போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளது.
தலைவர்களை ஜனநாயகம் கட்டுப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தைத் தலைவர்கள் கட்டுப்படுத்தக் கூடாது. டேனியல் என்ற தனிமனிதரும் அன்வாரும் முக்கியமானவர்கள் அல்லர். போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் வாழ்கிற மக்களே முக்கியமானவர்கள். போர்ட்டிக்சன் மக்கள் டேனியலையும், பிகேஆர் கட்சியையும், பக்காத்தான் கூட்டணியையும் நம்பி வாக்களித்தனர். இன்று டேனியல் என்ற அரசியல்வாதி அத்தொகுதியில் இருந்து பின்வாங்கியிருப்பது மக்களையும் ஜனநாயக நடைமுறையையும் அலட்சியப்படுத்துகிறார் என்பதை நிரூபிக்கிறது.
அன்வாரைப் பொறுத்தவரை, தான் அடுத்த பிரதமராக வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இதற்காக அவர் போர்டிக்சனையும், ஜனநாயகத்தையும், பக்காத்தான் கட்டமைப்பையும் தன் பேராசைக்காக அடகு வைக்கிறார். அவருடைய ரீஃபோர்மாசி பிரச்சாரம் எல்லாம் சுயநலத்தையே அச்சாக வைத்து முன்னெடுக்கப்படுகிறது என்று தெளிவாகிறது.
அன்வார் சிறந்த அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால், போர்ட்டிக்சன் நாடாளுமன்றத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார்.
மலேசிய மக்கள் ஜனநாயகக் கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஏதோ, ‘ஆம்’, ‘இல்லை’ அல்லது, ‘சரி’, ‘தவறு’ என்ற கீழ்நிலை சிந்தனையோடு மட்டுமே பார்க்கிறார்கள். 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி வெற்றது சரியான தீர்ப்பாக இருக்கலாம். ஆனால், அன்வார் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றால், அது ஜனநாயகத்துக்கு விளைவிக்கப்பட்ட துரோகமாவே அமையும்.
அப்படியே அன்வார் போர்ட்டிக்சனில் தோற்றுப் போனாலும், அவர் சும்மா இருக்க மாட்டார். இன்னொரு இடைத் தேர்தலுக்கு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரைத் தூண்டி விடுவார். பல இலட்சம் ரிங்கிட் (அல்லது மில்லியன்… பில்லியன்…. ரிங்கிட் கூட) பேரம் பேசப்படலாம்.
அவர் முன்னெடுக்கும் எந்த அரசியல் நகர்வுகளுக்கும் முதிர்ச்சியான ஜனநாயகவாதிகளும், மக்களும் இடம் கொடுக்கக் கூடாது…… மலேசியாவை ஆபத்து அண்டக் கூடாது.