சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்(ஏஜிசி) பிரபல வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு எதிரான வழக்கில் கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராமை அரசுத்தரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைவராக நியமித்துள்ளது.
1எம்டிபி தொடர்பான வழக்குகளை நடத்துவதற்காகவே ஏஜிசி கடந்த மாதம் கோபால் ஸ்ரீராமை நியமித்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று காலை 6 மணிக்கு கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) ஷாபியைக் கைது செய்தது. அவர்மீது பணச் சலவை குற்றச்சாட்டு சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாபி, பணச் சலவைக் குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு ஆகியவை சுமத்தப்ப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.